வனவியல் முன்னுரை

வனவியல் பற்றிய ஒரு கண்ணோட்டம்

முன்னுரை :
மாநிலத்தின் மொத்த புவியியல்  பகுதி 130.058 சதுர கி.மீ. இது நாட்டின்  3.96% புவியியல் பகுதியை அடக்கியுள்ளது. இது   805 வடக்கு அட்ச ரேகை முதல்   35035 வடக்கு அச்ச ரேகை வரை மற்றும்  76015’ - 80020’ கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. மாநிலத்தை நான்கு பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கலாம். அவை, கடற்கரை சமவெளி, கிழக்கு தொடர்ச்சி மலை, மத்திய பீடபூமி மற்றும் உயர்ந்த மலைகள். தென்மேற்கு பருவமழை, பீடபூமிக்கு ஆதரமாக உள்ளது. பின்வாங்கிய வடகிழக்கு பருவமழை, கிழக்கு கரைக்கு மழையைக் கொண்டு வருகிறது. மலைகளில் மாநிலத்தின் வெப்பநிலை 20 செல்சியஸ். இதர பகுதிகளில் 450 செல்சியஸ் நிலவுகிறது. சராசரி மழை 925 மில்லி மீட்டரிலிருந்து  1170 மி.மீ. உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மக்கள் தொகை 7,214 மில்லியன் ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5.965% பங்களிப்பாகும். கிராமப்புற மக்கள் தொகை 51.55% மற்றும் நகர்ப்புற மக்கள் தொகை 45.45%  ஆகும். ஒரு கி.மீ சதுர அடிக்கு மக்கள் தொகையின் அடர்த்தி 555  நபர்கள் ஆவர். மாநிலத்தில் கால்நடை தொகை  30.76 மில்லியன் ஆகும்.   (கால்நடை கணக்கெடுப்பு, 2007).

நிலப் பயன்பாட்டின் அமைப்பு :

1. மொத்த புவியியல் பகுதி
2. நிலப் பயன்பாட்டிற்கானப் பகுதி (அறிக்கை)
3. வனப்பகுதி
4. சாகுபடிக்கு கிடைக்கப்பெறாத பகுதி
5. நிலையான மேய்ச்சல் நிலம் மற்றும் இதர மேய்ச்சல் நிலங்கள்
6. இதர மரப்பயிர்கள் மற்றும் தோப்புகளின் பகுதி
7. பண்படுத்தப்படக்கூடிய தரிசுநிலம் 
8. இதர தரிசு நிலங்கள்
9. தற்போதைய தரிசு நிலங்கள்
10. விதைக்கப்பட்ட மொத்தப் பகுதி

 காட்டு வளங்கள்:
பதிவு செய்யப்பட காடுகளின் பகுதி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 22,877 ஆகும். ஒதுக்கப்பட்ட காடுகளின் நிலப்பரப்பு  84.75% ஆகும். பாதுகாக்கப்பட்ட காடுகளின் நிலப்பகுதி  9.54% ஆகும். பிரிக்கப்படாதக் காடுகளின் நிலப்பகுதி   5.71% ஆகும்.
மாநிலத்தில் காணப்படும் பிரதான காடுகளின் வகைகளில் வெப்ப மண்டல பசுமை நிறக் காடுகள், வெப்ப மண்டல அரை பசுமை நிறக் காடுகள், வெப்ப மண்டல ஈர இலையுதிர்க் காடுகள், கரையோர மற்றும் சதுப்புநிலக் காடுகள், வெப்ப மண்டல வறண்ட இலையுதிர்க்காடுகள், வெப்ப மண்டல முள், மிதவெப்ப மண்டல அகன்ற இலைகள், மலைசார் ஈர வெப்பநிலைக் காடுகள்.
நீலகிரி மாவட்டத்தின் தனித்துவ அம்சமானது, மாவட்டத்தின் மொத்த நிலப்பகுதியில் 56%  காடுகள்தான் உள்ளது. கிருஷ்ணகிரியில்  39.4%, தர்மபுரியில்  32.0%, கன்னியாக்குமரியில்  80.1% மற்றும் தேனியில் 32.0%. ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வெல்லூர், கோவை, திருவண்ணாமலை. நீலகிரி, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் அனைத்தும் 80.1% காட்டுப்பகுதிக்குப் பங்களிக்கிறது.       
பாதுகாக்கப்பட்ட பகுதி :
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து தேசியப் பூங்காக்களும் 21 வனவிலங்கு சரணாலயங்களும் ஒரு பழமையான சரணாலயம்   3,809.8 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன. இது,  2.94% நிலப்பரப்பில் உள்ளடங்கியுள்ளது. கலக்காடு முண்டந்துரை புலிகள் சரணாலயம், முதுமலை மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை முக்கயமாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். இந்த மாநிலத்தில், நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய இரண்டு உயிரியல் சரணாலயங்கள் உள்ளன.
கூட்டு வன மேலாண்மை :
வன மேலாண்மைக்கு உள்ளூர் குடியினமக்களை ஈடுபடுத்துவதற்கான தீர்மானத்தை ஜெ.பி.ஐ.சி. திட்டத்தின் கீழ் வரும் அரசு 1997 ஆம் ஆண்டு வெளியீட்டது. மொத்தம்   1,367 கூட்டு வன மேலாண்மை குழுக்கள், 0.48 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதியை  மார்ச் 2005 வரை நிர்வகித்துள்ளனர். இது ஏறக்குறைய 21% வனப்பகுதியை உள்ளடக்கும்.   0.24 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார்      10,000 குடும்பங்கள் பழங்குடியினப் பிரிவினைச் சேர்ந்தவர்கள். நீர் அறுவடைக் கட்டமைப்புகள் கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016